fbpx
Connect with us

Cinemapettai

ஜல்லிக்கட்டிற்காக களமிறங்குகிறார் டொனால்டு டிரம்ப்!

jallikattu-and-trump_cinemapettai

ஜல்லிக்கட்டிற்காக களமிறங்குகிறார் டொனால்டு டிரம்ப்!

ஜல்லிக்கட்டு நடத்த கடந்த 2 வருடங்களுக்கு முன்பிருந்தே தடை இருந்தாலும், இந்த ஆண்டு அந்த தடைக்கு எதிராக இளம் தலைமுறையினரிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி முன்எப்போதும் ஏற்படாத ஒன்று.

இந்தி எதிர்ப்பு போராட்டம், மொழிப் போராட்டங்களுக்கு பிறகு இளைய தலைமுறையினரிடம் தமிழ் உணர்வு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அண்மைக் காலமாக பொதுப் பிரச்சனைகளுக்காக இளைஞர்கள் போராடுவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றாததால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழலில், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவின் பல நகரங்களில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டங்களை கவிதா பாண்டியன் ஒருங்கிணைத்து வருகிறார்.  ரிச்மண்ட், நியூயார்க், பென்டன்வில், அட்லாண்டா, வாஷிங்டன் டிசி, பால்டிமோர், நியூ ஜெர்ஸி, மினியாபோலிஸ், சியாட்டல் ஆகிய நகரங்களில் கடந்த 2 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்றும் போராட்டங்கள் நடைபெறும் என தெரிகிறது. அமெரிக்க தூதரங்களில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க சட்டத்தை பொறுத்தவரை அந்நாட்டில் வாழும் வேற்று நாட்டு வம்சாவளியினரின் கோரிக்கைகளையும் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

எனவே ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அதிபராக பதவி ஏற்க உள்ள டொனல்டு டிரம்ப்பிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தால் அவர் நிச்சயம் இதற்காக குரல்கொடுக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top