‘கபாலி’ திரைப்படம் வெளியாகும்போது, கட்-அவுட்டுக்கு ஊற்றுவதற்காக, பாலை வீணாக்க கூடாது என்று தமிழக பால் டீலர் சங்க தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில், 1.5 லட்சம் பால் வினியோகஸ்தர்கள் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். வெயிலோ, மழையோ அவர்கள் பணி நிற்பதில்லை.

அதிகம் படித்தவை:  ஹீரோயினை விட எனக்கு மேக் அப் போட அதிக நேரம் ஆகியிருக்கும் - 2.0 பற்றி அக்ஷய் குமார்.

ஆனால் விஜய் நடித்த தெறி படம் ரிலீஸ் ஆனபோது, சில ரசிகர்கள், பாலை திருடி கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர். இதுபோன்ற செயல்களை நடிகர்கள் கண்டிக்க வேண்டும்.

பெரிய ஸ்டார் படங்கள் வெளியாகும்போது ஏற்படும், பால் வீணாதல் பிரச்சினை கவலை தருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஜினி ரசிகர் சங்கங்களையும் தொடர்பு கொண்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் பொன்னுசாமி. பாலாபிஷகம் செய்வதற்கு பதில், ரசிகர்கள் ரத்த தானம் செய்யலாம் என்பது பொன்னுசாமி யோசனையாக உள்ளது.

அதிகம் படித்தவை:  ரஜினியின் பேட்ட படத்தில் விஜய்சேதுபதியின் வில்லன் கெட்டப் இதுதான் வைரலாகும் புகைப்படம்.!

சென்னையில்தான் இதுபோல ரசிகர்கள் கொண்டாட்டம் நடத்துகிறார்கள் என்பதில்லை. ரஜினியின், எந்திரன் திரைப்படம் வெளியாகும்போது அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் கூட பாலாபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.