ஹைதராபாத்: நான் எதற்குமே பயப்படும் ஆள் இல்லை. உன்னால் முடியாது என்று யாராவது சொன்னால் அதை செய்து காண்பிக்காமல் ஓய மாட்டேன் என நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் சேர்ந்து ஸ்ருதி ஹாஸன் நடித்த கட்டமராயுடு படம் ஹிட்டாகியுள்ளது. சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் இளவரசியாக நடிக்கிறார் ஸ்ருதி ஹாஸன். இந்நிலையில் அவர் தன்னை பற்றி கூறும்போது,

முடியாது

இது நடக்காது, இதை நம்மால் செய்ய முடியாது என்று நான் நினைக்கவே மாட்டேன். இதை உன்னால் செய்ய முடியாது என்று யாராவது சொன்னால் அதை செய்து காண்பிக்காமல் ஓய மாட்டேன்.

 

தன்னம்பிக்கை

எனக்கு தன்னம்பிக்கை அதிகம். எதற்கும் நான் பயப்படுவது இல்லை. எந்த காரியமாக இருந்தாலும் நம்மால் செய்ய முடியும் என நம்புபவள். பெரிய ஹீரோயினாக ஆகிவிட்டதால் இதை கூறவில்லை.

சினிமா

சினிமாவில் அடியெடுத்து வைத்த புதிதில் கூட நான் பயந்தது இல்லை. இந்த கதாபாத்திரத்தை நம்மால் செய்ய முடியுமா என்று ஒருபோதும் சந்தேகித்தது இல்லை.

உழைப்பு

கடுமையாக உழைத்தால் பலன் தானாக வரும். சினிமாவுக்கு வந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். கஷ்டப்பட்டு உழைப்பதில் தவறு இல்லை என்றார் ஸ்ருதி.