சொல்லி அடிக்கும் கில்லியாக மாறிய சிவகார்த்திகேயன்.. டாக்டர் சாதனையை முறியடிக்கும் டான்

சின்னத்திரையில் இருந்து வந்தவர்களும் வெள்ளித்திரையில் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன் உள்ளார். ஆனால் அவ்வளவு எளிதில் அந்த உயரத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. முதலில் சைடு கேரக்டரில் நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு மெரினா படம் ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்கள் வரவேற்பு பெற்று வந்த நிலையில் நடுவில் பெரிய சறுக்கல் விழுந்தது. மேலும் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பிலும் இறங்கியிருந்தார். அந்தப் படங்களும் தோல்வியை சந்திக்க மிகுந்த கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவருக்கு கை கொடுத்த படம் தான் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற அந்தஸ்தையும் டாக்டர் படம் பெற்றது.

டாக்டர் படம் கிட்டத்தட்ட100 கோடி வசூல் செய்தது. இப்படத்தைத் தொடர்ந்து சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டான் படம் மே 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இந்நிலையில் டான் படம் முதல் நாளில் 11 கோடி வசூல் செய்தது. மேலும் தொடர்ந்து டான் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரத் தொடங்கியதால் மக்கள் கூட்டம் திரையரங்குகளுக்கு அலைமோதியது. இப்படம் வெளியாகி 12 நாட்களில் தற்போது 100 கோடி வசூலை எட்டியுள்ளது.

இவ்வளவு குறுகிய காலத்திலேயே 100 கோடி வசூலை பெற்றதால் லைகா நிறுவனம் தற்போது மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டியதால் அவரது மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளது. இதனால் பல பெரிய நிறுவனங்களும் தற்போது சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்க விரும்புகின்றனர்.

Next Story

- Advertisement -