fbpx
Connect with us

பின்னுக்கு தள்ளப்பட்ட ரோஹித் சர்மா.. ஆஸ்திரேலியா தொடரில் ஆதிக்கம் செலுத்த போகும் விராட் கோலி!

kholi-rohit

Sports | விளையாட்டு

பின்னுக்கு தள்ளப்பட்ட ரோஹித் சர்மா.. ஆஸ்திரேலியா தொடரில் ஆதிக்கம் செலுத்த போகும் விராட் கோலி!

இந்திய அணி நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டியில் பங்கேற்க உள்ளது.

இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் அணிகள் மூன்றுக்கும் கோலிதான் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள், டி 20 அணியில் துணை கேப்டனாக கே. எல் ராகுல் செயல்படுவார்.

அணியில் ஆர்சிபி வீரர்கள் அதிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அதுமட்டுமின்றி முன்னாள் ஆர்சிபி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சாஹல், சைனி ஆகிய பெங்களூர் அணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவ், சிராஜ், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இன்னொரு பக்கம் ஒருநாள் அணியிலும் சைனி , சாஹல் ஆகியோருக்கு ஆர்சிபி அணியில் இருந்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விராட் கோலிக்கு நெருக்கமான மயங்க் அகர்வால் , சுபம் கில் போன்றோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தமாக இந்திய அணியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார் விராட் கோலி. கே. எல் ராகுலை துணை கேப்டனாக அறிவித்ததன் மூலம் இந்திய அணியில் தனக்கு பின் ராகுல்தான் என்பதை கோலி சொல்லாமல் சொல்லிவிட்டார்.

இதனால் இந்திய அணியின் ரோஹித் சர்மாவிற்கு இருந்த மதிப்பு வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்கிறார்கள்.

rohit sharma

Continue Reading
To Top