fbpx
Connect with us

பெண்களை இழிவாக பேசி, சர்ச்சையை கிளப்பிய தொல் திருமாவளவன்.. கொந்தளித்த தமிழக மக்கள்.!

Tamil Nadu | தமிழ் நாடு

பெண்களை இழிவாக பேசி, சர்ச்சையை கிளப்பிய தொல் திருமாவளவன்.. கொந்தளித்த தமிழக மக்கள்.!

தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக விளங்குபவர் தொல் திருமாவளவன். இவர் தற்போது  எம்.பி-ஆக பணியாற்றி வருகிறார்.

இந்த சூழலில், இவர் இந்துப் பெண்கள் குறித்து பேசிய விவகாரம் தற்போது தமிழ் மக்களின் கோபத்தை கிளறி விட்டுள்ளார்.

ஏனெனில் இவர் சமீபத்தில், பெண்களை குறித்து பேசும்போது, ‘பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி, அனைத்து பெண்களும் ஆண்களுக்கு கீழானவர்கள்’ என்று கூறியதன் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு இந்துப் பெண்களை இழிவாக பேசிய தொல் திருமாவளவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று  இணையத்தில் எக்கச்சக்கமான கோரிக்கைகள் எழுந்துள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை மக்கள் ஆங்காங்கே நடத்தி வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் திருமாவளவனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

எனவே பெண்களை இழிவாக பேசியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்  திருமாவளவன், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் திருமாவளவனின் இந்த செயலால், ஒட்டுமொத்த பெண்களின் மனதை புண்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்களுடைய வெறுப்பையும் சம்பாதித்துள்ளார்.

thirumavalavan

thirumavalavan

Continue Reading
To Top