அர்ஜெண்டினாவில் மரத்தில் இருந்து விழுந்து அடிபட்ட தனது எஜமானை, அவர் வளர்த்த நாய் கட்டிப் பிடித்து பாசத்தை வெளிப்படுத்திய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினாவின் Bahia Blanca பகுதியைச் சேர்ந்தவர் Jesus Hueche, இவர் தன் வீட்டின் வெளியே இருந்த மரத்தை சுத்தம் செய்வதற்காக, மரத்தின் மீது ஏறி கிளைகளை வெட்டியுள்ளார்.

அப்போது திடீரென்று அவர் நின்று கொண்டிருந்த கிளை முறிந்ததால், கீழே விழுந்துவிட்டார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆம்புலன்சில் வந்த அவர்கள் அடிபட்ட Jesus Hueche கழுத்தில் neck brace போட்டுள்ளனர். அதன் பின் அவர்கள் ஆம்புலன்சில் ஏற்றிச் செல்வதற்காக Jesus Hueche தூக்கிய போது, அவர் வளர்த்து வந்த செல்ல நாய் Tony அவர்களை தூக்க விடாமல் சிறிது நேரம் Jesus Hueche-ஐ பார்த்தபடி நெஞ்சில் ஏறி கட்டிப்பிடித்துக் கொண்டது.

யாரையும் தூக்கவிடாமல் கத்தியுள்ளது, அதன் பின் Jesus Hueche கூறிய பின்னரே Tony அவர்களை தூக்கிச் செல்ல அனுமதி அளித்துள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர் தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், சிறிய காயம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அங்கிருந்த நபர்கள் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதால், வைரலாக பரவி வருகிறது.