Connect with us
Cinemapettai

Cinemapettai

dog

India | இந்தியா

கள்ளத் தொடர்பில் இருந்த நாய்.. கோபத்தில் நடுரோட்டில் விட்டு சென்ற உரிமையாளர்

கேரள மாநிலத்தில் 3 வயது பொமேரியன் நாய் குட்டி ஒன்றை நடு ரோட்டில் அனாதையாக விட்டு சென்றுள்ளனர். அதன் கழுத்தில் ஒரு கடிதம் எழுதி வைக்கப்பட்டுள்ளது, அந்த கடிதம் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது.

சமூக ஆர்வலர் ஷமின் அந்த நாயை எடுத்து அதில் இருந்த கடிதத்தை வாசித்து பார்த்து அதிர்ச்சியாகி விட்டார்.  இது செல்லமான பிராணி, பால், முட்டை, சாதம் சாப்பிடும், யாரையும் இதுவரை கடித்துதில்லை, நன்கு பழகும், ஆனால் இது பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் இதனை விட்டு விட்டுச் செல்கிறேன்.

நாய்களுக்கு ஏதாவது நோய் வந்தால் மட்டுமே இதைப் போன்று நடுரோட்டில் விட்டுவிட்டு செல்வார்கள் அதனை அங்குள்ள கார்ப்பரேஷன் வேலையாட்கள் பிடித்து சென்று விடுவார்கள். ஆனால் இந்த நிகழ்வு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சமூகத்தில் இது போன்ற ஆட்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட வைத்துள்ளது.

dog

letter on dog neck

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top