Tamil Cinema News | சினிமா செய்திகள்
மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்!
கட்டாய விடுமுறை தினங்கள் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாளை நேற்று மத்திய அரசு நீக்கியது. நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும், பொங்கல் திருநாளை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
????????????? Does TN belong to India or not ? pic.twitter.com/v9o3hPPcnl
— G.V.Prakash Kumar (@gvprakash) January 9, 2017
இந்நிலையில், மத்திய அரசின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷீம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி, தனது கண்டத்தை தெரிவித்துள்ளார்.
