இந்திய சினிமாவின் மணிமகுடமாக வெளியான பாகுபலி 2 படம் ரூ. 1500 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் நட்சத்திரங்கள் அனைவரின் மார்க்கெட்டும் பெரிதாக மாறியுள்ளது. பாகுபலி நாயகன் தற்போது நடித்து வரும் சாஹோ படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோ தயாரிப்பில் சங்கர்-இசான்-லாய் இசையில் மதி ஓளிப்பதிவில் சூஜித் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தை பாலிவுட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இப்படத்தின் அனைத்து இந்திய உரிமைகளை ரூ. 350 கோடிக்கு விலைக்குக் கேட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறியுள்ளன.

இந்நிலையில், படம் துவங்கும் முன்னரே கோடிக் கணக்கில் லாபத்தை ஈட்டப்போகும் படம் எனும் பெருமை சாஹோ படத்திற்குக் கிடைக்கவுள்ளது.