திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

விடிய விடிய அஜித் குடிப்பாராமே, அப்படியா? என்று கேட்ட ரசிகர்.. தரமான பதிலடி கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் விடிய விடிய மது அருந்தும் பழக்கம் கொண்டவரா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு தரமான பதிலடி ஒன்றை பிரபலம் ஒருவர் கொடுத்துள்ளது தல ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் ஸ்பெயின் நாட்டில் நடக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தல ரசிகர்கள் உற்சாகமாக இருந்த நிலையில் சக ரசிகர் ஒருவரின் கேள்வி தல ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. ஆனால் அதற்கு பிரபலம் ஒருவர் செம பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் என்னை அறிந்தால் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் தல அஜித் அறையில் பாதி மது அருந்திய டம்ளர் புகைப்படம் ஒன்று இருந்தது வெளியாகி வைரல் ஆனது. இதனால் அஜித்துக்கு குடிக்கும் பழக்கம் இருக்கும் என அனைவரும் மனக் கோட்டை கட்டினார்.

இது சம்பந்தமாக சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் ரசிகர்கள் ஒருவர், விடிய விடிய அஜித் குடிப்பாராமே, அப்படியா? என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன், கடந்த 25 வருடமாக தல அஜித் மதுவை தொட்டுக் கூட பார்த்ததில்லை என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

thala-ajith-cinemapettai
thala-ajith-cinemapettai

இதனால் தல ரசிகர்கள் கேள்வி கேட்ட அந்த ரசிகரை சமூகவலைதளத்தில் விளாசி வருகின்றனர். சமீபகாலமாக தல அஜித் மீது மது சம்பந்தப்பட்ட செய்திகள் மற்றும் வதந்திகள் அதிகம் பரவி வருகின்றன என்பதும் கூடுதல் தகவல்.

- Advertisement -spot_img

Trending News