fbpx
Connect with us

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு..! தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா?

rajini-sj-surya

Politics | அரசியல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அரசியல் முடிவு..! தாமரை தமிழ்நாட்டில் மலருமா இல்லையா?

ரஜினியின் அரசியல் திட்டம்..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பல அரசியல் கட்சிகள் வலைவீசி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அரசியலில் கால் எடுத்து வைத்தாலே பலவிதமான பிரச்சனைகளை மீடியா, ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் என்று சந்திக்க நேரிடும். சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளன்று அவரின் அண்ணனிடம் ஒரு சில கேள்விகளை முன்வைத்தனர் செய்தியாளர்கள்.

rajini

முன்னதாக அரசியல் கட்சி தொடங்க வில்லை என்றும் ஒரு சில நாட்கள் கழித்து அரசியல் கட்சி கண்டிப்பாக தொடங்குவார் என்றும் சூப்பர் ஸ்டாரே பற்றி பல விமர்சனங்களை உண்மை ஆக்கியவர் இவர்தான். ஆனால் செய்தியாளர்கள் ரஜினியின் அரசியலை பற்றி ஒரு கேள்வி எழுப்பியதற்கு அவர் இப்போதைக்கு தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்த மாட்டார் என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

petta-movie-rajini

petta-movie-rajini

பல முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வரும் இந்த சூழ்நிலையில் தான் அரசியலுக்கு வருவதாகவும் பின்னர் அரசியல் கட்சி ஆரம்பித்து இன்னும் அவர் சின்னத்தைப் பற்றி அறிவிப்பு இல்லாமல் இருப்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர் எப்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் மக்களாகிய நமக்கும் தான். இப்போது எடுத்திருக்கும் இந்த ஒரு முடிவு அல்லது விவாதம் கூட பிஜேபியின் தற்போது நடந்த தேர்தல் முடிவுகள் ஆக கூட இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

பிஜேபி கட்சியினரால் மற்ற மாநிலங்களில் தேர்தலில் தோற்ற இந்த சமயத்தில் கண்டிப்பாக தமிழ்நாட்டில் அவர்கள் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒருத்தர பத்து பேர் சேர்ந்து எதிர்த்தால் யார் பலசாலி என்ற கேள்விக்கு மறைமுகமாக பிஜேபி தான் பலசாலி என்று அவர் கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில்சூப்பர் ஸ்டார் போட்டியிடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Politics | அரசியல்

Advertisement

Trending

To Top