India | இந்தியா
பெண் டாக்டர் கற்பழிப்பு வீடியோ இருக்கிறதா? ஆபாச இணையதளத்தில் தேடிய கொடுமை.. அடச்சீ!
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா நான்கு பேரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு டாக்டர் பிரியங்காவை லாரி ஓட்டுநர்கள் 4 பேர் சேர்ந்து கற்பழித்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் நாடெங்கும் கொழுந்துவிட்டு எரிகிறது. இந்நிலையில் அந்தப் பெண்ணின் கற்பழிப்பு வீடியோ இணையதளத்தில் இருக்கிறதா? என பலர் ஆராய்ச்சி செய்தது பெரும் வேதனைக்குரிய செயலாக மாறியுள்ளது.
கற்பழிப்பு செய்யப்பட்டவர்களை தூக்கிலிட வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து போராடிக் கொண்டிருக்கும் இதே இந்தியாவில்தான், கற்பழிப்பு செய்யப்பட்ட பிரியங்காவின் வீடியோ ஆபாச இணையதளத்தில் உள்ளதா? என 80 லட்சம் இந்தியர்கள் தேடியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சமூக வலைதள குறிப்பிட்டார்கள், இதனை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இதனுடைய டேட்டாவை இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
குற்றவாளிகளுக்கு தண்டனை தருவதற்கு மாறாக இறந்தபோன அந்தப் பெண்ணின் உடலை இணையதளத்தில் தேடியது அனைவரும் கூனிக்குறுகி நிற்க வேண்டிய செயலாக மாறியுள்ளது.
