கார்த்தி படத்திடம் ஒரு வாட்டி உதைவாங்கியதே போதும்.. டாக்டர் ரிலீஸ் தேதியை மாற்றிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் கார்த்தி தான் என்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் மிக வேகமாக உயர்ந்த நடிகர்களில் மிக முக்கியமானவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் படம் வெளியாக உள்ளது. முன்னதாக டாக்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

அதுமட்டுமில்லாமல் தளபதி 65 படத்தின் இயக்குனர் என்பதால் டாக்டர் படத்தின் மீது விஜய் ரசிகர்களுக்கு தனி அக்கறை ஏற்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பார்க்கிறார்களோ, இல்லையோ தளபதி ரசிகர்கள் கண்டிப்பாக டாக்டர் படத்தை பார்த்து விடுவார்கள்.

இப்படி சுற்றியும் பாசிட்டிவாக இருக்க திடீரென சிவகார்த்திகேயன் மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்த டாக்டர் படத்தை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு மாற்றி விட்டாராம். இதுதான் வியாபாரத் தந்திரம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஆனால் சிலரோ ஏற்கனவே கார்த்தி நடித்த தம்பி படத்துடன் மோதி ஹீரோ படம் படுதோல்வி அடைந்ததால் மீண்டும் அவருடன் மோத வேண்டாம் என சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு என்கிறார்கள்.

டாக்டர் படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியான அடுத்த ஒரே வாரத்தில் கார்த்தியின் சுல்தான் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுக்கு ரெமோ என்ற வெற்றி படத்தை கொடுத்த பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் சுல்தான் படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும் என தெரிந்து கொண்டு தற்போது ஏப்ரல் 14ஆம் தேதிக்கு மாற்றி விட்டாராம் சிவகார்த்திகேயன்.

doctor
doctor

ஆனால் அதே தேதியில் விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் என்ற படம் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதியை விட சிவகார்த்திகேயனுக்கு தமிழ்நாட்டில் நல்ல மார்க்கெட் இருப்பதால் தைரியமாக களமிறங்க உள்ளாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்