பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் மஞ்சள் நிறத்திலேயே பெயிண்ட் அடிக்கப்பட்டிருப்பது ஏன் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா?.

school-bus_cinemapettai
school-bus_cinemapettai

ஒரு நாட்டின் முக்கியமான சொத்தாகக் கருதப்படுவது அந்நாட்டின் மாணவர்கள்தாம். அதனால்தான் மாணவ சமுதாயத்தின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் ஒவ்வொரு நாடும் அதிக அக்கறையுடன் செயல்படுவதுண்டு. அந்த வகையில் போக்குவரத்து நெரிசலிலும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வண்ணம், பள்ளிப் பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பூசப்பட்டது. நீங்கள் நினைக்கலாம், மஞ்சள் நிறத்தை விட சிவப்பு நிறமே அதிக கவனம் ஈர்க்கும் நிறம் என்று, ஆனால் அதில் உண்மையில்லை. மற்ற நிறங்களை விட மஞ்சள் நிறமே 1.24 மடங்கு அதிக கவனத்தை ஈர்க்கும் நிறம் என்கிறது அறிவியல். மாணவர்களின் பாதுகாப்பைக் கருதியும், எந்த இடத்திலும் விரைவில் அடையாளம் கண்டுகொள்ளும்பொருட்டும் பள்ளிப் பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பூசப்பட்டது.

முதன்முதலில் அமெரிக்காவில்தான் பள்ளிப் பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் என முடிவு செய்யப்பட்டது. டாக்டர் பிராங்க் கைர் என்பவர் தலைமையில் அமெரிக்காவில் கடந்த 1939-ல் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அமெரிக்கா முழுவதும் உள்ள பள்ளிப்பேருந்துகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில்தான் பள்ளிப்பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பூச வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

school-bus_cinemapettai

மஞ்சள் நிறம் என்றில்லாமல், எலுமிச்சை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களின் கலவையிலான மஞ்சள் நிறமே பள்ளிப் பேருந்துகளின் அடையாளம் என்று வரையறுக்கப்பட்டது. அமெரிக்காவில் தொடங்கிய அந்த வழக்கம் இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் பின்பற்றும் நடைமுறையாக மாறிப்போனது. பள்ளிப்பேருந்துகளின் மஞ்சள் நிறத்துக்குப் பின்னால் இருக்கும் வரலாறு இதுதான் மக்களே.