Connect with us

Cinemapettai

இந்த படங்களில்லாம் யார் நடிச்சிருக்க வேண்டியது தெரியுமா.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த படங்களில்லாம் யார் நடிச்சிருக்க வேண்டியது தெரியுமா.!

‘இன்னார்க்கு இன்னார் என்று’ என்பது திருமணத்தில் மட்டுமல்ல, சினிமாவிலும் நடக்கும். சில புகழ்பெற்ற படங்கள் வேறு ஒருவர் நடிக்க வேண்டி இருந்திருக்கும். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வேறொருவர் நடித்து படத்தின் ரிசல்ட்டே மாறியிருக்கும். அப்படி சில படங்களை லிஸ்ட் எடுத்தோம்.

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் கவிதாலயா தயாரிப்பில் வெளியாகி நாட்டையே உலுக்கிய ரோஜா படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருந்தது ராஜீவ் மேனன். மேக்கப் டெஸ்டெல்லாம் எடுத்தபிறகு அவர் நடிப்பில் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டதால் அரவிந்த்சாமி உள்ளே வந்து இளம்பெண்களின் ஆதர்ச நாயகனானார்.

 

எந்திரன் படம் கமல் நடித்திருக்க வேண்டிய படம். கமலை வைத்து ஃபோட்டோஷூட் எல்லாம் எடுத்த நிலையில் கமலிடம் இருந்து ரஜினி கைக்கு தஞ்சம் புகுந்தான் எந்திரன். எந்திரனின் மாபெரும் வெற்றியை நாம் சொல்ல வேண்டுமா என்ன?

சூது கவ்வும் கதையை வடிவேலுவை வைத்து எடுக்கத்தான் அதிகம் முயற்சி செய்தார் நலன் குமாரசாமி. அவர் விருப்பம் காட்டாததால் விஜய் சேதுபதி சூது கவ்வும் உள்ளே வந்தார். வயதுக்கு மீறிய வேடத்தை கனகச்சிதமாக செய்து பிளாக்பஸ்டர் ஆக்கினார் விஜய் சேதுபதி.

அனேகன் படம் விஜய்க்காக உருவான சப்ஜெக்ட். சில தவிர்க்க முடியாத காரணங்களால் விஜய்க்கு பதிலாக தனுஷ் நடித்தார். தனுஷுக்காக சில மாற்றங்கள் செய்திருந்தார் கே.வி.ஆனந்த்.

அலைபாயுதே படத்தின் சக்தி கதாபாத்திரத்தில் நடித்த ஷாலினி நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். அந்த வேடம் முதலில் செய்யவிருந்தது வசுந்தரா தாஸ். வசுந்தரா தாஸுக்கும் மாதவனுக்கும் ஜோடிப்பொருத்தம் சரியில்லாததால் ஷாலினி கொண்டுவரப்பட்டார்.

ராஜாரானியில் ஜெய் நடித்த கேரக்டர் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது. அட்லீயும் சிவாவும் நண்பர்கள் என்பதால் படத்தின் கதை உருவானதில் இருந்தே சிவாவை மனதில் வைத்திருந்தவர் புராஜக்ட் பெரிய லெவலுக்கு போனதும் அப்போது சின்ன ஆளாக இருந்த சிவாவை கழற்றி விட்டுவிட்டார் அட்லீ. சிவாவுக்கு பதிலாக வந்தவர் தான் ஜெய்.

விஸ்வரூபம் படத்தில் பூஜா குமாருக்கு பதிலாக நடித்திருக்க வேண்டியது சோனாக்‌ஷி சின்ஹா. தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுக்க முடியாததால் அவருக்கு பதிலாக அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்த பூஜா குமாரைக் கூட்டி வந்தார் கமல்.

தோழா படத்தில் முதலில் நடிக்க வேண்டியது ஸ்ருதி ஹாசன். ஆனால் அவர் புலிக்கு கால்ஷீட்டை கொடுத்துவிட்டு சொதப்பியதால் அவருக்கு பதிலாக தமன்னா ஒப்பந்தம் ஆனார். இந்த பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கம் வரை போனது.

பொல்லாதவன் படத்தில் குத்து ரம்யா நடித்த பாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்திருக்க வேண்டியது. காஜலுக்கு பதிலாகத் தான் உள்ளே வந்தார் குத்து ரம்யா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top