Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜயை எந்த மாநில மக்கள் அதிகம் தேடியது தெரியுமா?

கூகுளில் விஜயை அதிகம் தேடியதில் புதுச்சேரி மாநில மக்கள் முதலிடத்தில் இருப்பதாக சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர்களின் நாயகன் என்ற அந்தஸ்த்தை பெற்று இருப்பவர் நடிகர் விஜய். இவரின் ஒவ்வொரு படமும் சரியான வரவேற்பை பெற தவறினாலும் படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் தான். இதற்கு காரணம் ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் எல்லையில்லாத அன்பு தான். எப்போதுமே விஜயின் பிறந்தநாளும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த வருடம் அப்படி சிலவற்றை விஜய் தவிர்க்க சொன்னதால் இணையத்தில் தங்கள் கொண்டாட்டங்களை நடத்தினர். இதை தொடர்ந்து, கூகுள் தேடலில் ஹிட் அடித்த விஜய் குறித்த சுவாரசிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

உலகிலுள்ள 7 கண்டங்களில் அண்டார்டிக்காவை தவிர மற்ற 6 கண்டங்களிலும் விஜயின் பெயர் தேடப்பட்டு இருக்கிறது. இதில், இலங்கை மற்றும் இந்தியாவில் தான் கடந்த 5 வருடங்களில் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறார். கூகுள் ட்ரெண்ட்ஸ் தகவலின்படி விஜயை இந்தியாவில் அதிகம் தேடிய மாநிலம் புதுச்சேரி தான்.

2008ம் ஆண்டில் இருந்து கடைசியாக வெளியான மெர்சல் வரை விஜய் 17 படங்களில் நடித்துள்ளார் விஜய். ஆனால், கூகுளில் அதிகம் தேடப்பட்ட அவர் புகைப்படங்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது ‘கத்தி விஜய்’ தான். தாடி, முறுக்கு மீசை என மிரட்டலான லுக்கில் வெளியான மெர்சல் போஸ்டருக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. உலக சாதனை படைத்த மெர்சல் டீசரை வீடியோவை தான் அதிக ரசிகர்கள் தேடி இருக்கின்றனர். உலகளவில் 1 கோடி லைக்ஸ்களை அள்ளிய முதல் திரைப்பட டீசர் மெர்சல் டீசர்தான். தற்போதுவரை மெர்சல் டீசர் 3.9 கோடி பேர் பார்த்துள்ளனர்.

நடிகர்களின் படங்களோ அவர் குறித்த செய்தியோ வெளியானால், ட்ரெண்ட் லிஸ்ட்டில் இடம் பெறுவது வழக்கம் தான். ஆனால், அது ஒவ்வொரு படத்திற்கு தேடப்படும் வார்த்தை மாறுப்படும். ஆனால், எப்போதெல்லாம் விஜய் படம் வெளியாகிறதோ அப்போதெல்லாம் உலக அளவில் ”Next Superstar Vijay” எனும் வார்த்தை கூகுளில் அதிகமாக தேடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top