சமூக வலைதளத்தில் சூறாவளியாக சுற்றிய செய்தி தான் பிரபல மாடலிங் நடிகை கானம் நாயர் காணாமல் போன அதிர்ச்சி சம்பவம். இது குறித்து நாம் ஏற்கனவே செய்தியும் பதிவிட்டிருந்தோம்.

கடந்த வெள்ளியன்று காணாமல் போனவர் சென்னை எழும்பூர் பகுதியிலுள்ள ஏ.டி.எம் ல் 10,000 ரூ எடுத்திருந்தார். இது அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

இதனால் போலிசார் அப்பகுதி முழுக்க தீவிர சோதனை போட்டுள்ளனர். அப்போது கானம் பிரபல துணிக்கடை அதிபர் வீட்டில் 3 நாட்களாக தங்கியிருந்தது தெரியவந்தது.

மேலும் கானம், தன் அம்மா எனது சிறு வயதிலேயே இறந்தவிட்டார். அக்காவும் திருமணமாகி சென்றுவிட்டார். அப்பாவோ டெல்லியில் இருக்க நான் மன அழுத்தத்திற்கு ஆளானதாக கூறினார்.

இதனால் தான் யாரிடமும் சொல்லாமல் தனிமை தேடி அங்கு சென்றேன் என போலிசிடம் கூறியுள்ளார்.