முனி என்பது 2007ல் வெளியான தமிழ், நகைச்சுவை, திகில் திரைப்படம் ஆகும். இதனை ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியுள்ளார். இவரே இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாகவும் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் வேதிகா குமார், ராஜ்கிரண் ஆகியோரும் நடித்துள்ளனர். முனி திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இது 9 மார்ச்சு 2007 அன்று வெளியானது. இத்திரைப்படம் அதே பெயரில் தெலுங்கு மொழியில் டப்பிங் முறையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழில் ராகவா லாரன்ஸ்க்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தமிழ்ழில் ராகவா லாரன்ஸ்சை முன்னுக்கு கொண்டுவந்த படம் என்றும் சொல்லலாம் இந்த படம் ஹிட் ஆனதால் அடுத்த பாகம் எடுத்து அதிலும் வெற்றியை பெற்றார்.

பின்பு மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா’ படங்களுக்கு பிறகு ராகவா லாரன்ஸ் கைவசம் இயக்குநர் மகாதேவ்வின் படம் மற்றும் ‘முனி 4’ (காஞ்சனா 3) ஆகிய இரண்டு படங்கள் உள்ளது.

இதில் ‘முனி 4’ படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக உள்ளது. ஏனெனில், ஹாரர் காமெடி ஜானரில் வெளியான ‘முனி, காஞ்சனா (முனி 2), காஞ்சனா 2 (முனி 3)’ ஆகிய இதன் முந்தைய பாகங்கள் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை லாரன்ஸே இயக்கி, நடிக்கிறார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்கிறாராம்.

‘முனி’ முதல் பாகத்தில் லாரன்ஸுடன் டூயட் பாடிய வேதிகா மற்றும் ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியா என டபுள் ஹீரோயின்ஸாம். நேற்று (அக்டோபர் 5-ஆம் தேதி) முதல் சென்னையில் துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்த ஷெடியூல் தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாம். தற்போது, படத்தின் ஒளிப்பதிவாளராக ‘விவேகம்’ பட புகழ் வெற்றி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை வெற்றியே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் இதர நடிகர்கள் – பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முனி-4 மாபெரும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு திகில் விருந்தாக அமையும்.