Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகை தமன்னா பட வாய்ப்புக்காக தயாரிப்பாளரை என்ன செய்தார் தெரியுமா?
தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் நாகச் சைதன்யா, தமன்னா நடிப்பில் வெளியான ’100% லவ்’ என்ற படம் தெலுங்கில் அதிக வசூலை குவித்தது.
இந்த படத்தின் தமிழ் ரீமேக் படத்தை சந்திரமௌலி இயக்குகிறார். இந்த படத்தின் ஹீரோவாக இசையமைப்பாளரும் நடிகருமாகிய ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிப்பதாகவும், சம்பளம் பிரச்சனை தொடர்பாக அவரை நீக்கியதாகவும், அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை ஷர்தா கபூர் நடிப்பதாக கூறப்பட்டது.
தற்போது நடிகை தமன்னா தனது செயலுக்கு வருத்தப்பட்டு தயாரிப்பாளர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால் அவர் மீண்டும் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் தமன்னா மற்றும் படக்குழு இதனை உறுதி செய்யவில்லை.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
