குழந்தைகள் தினமான இன்று திரையுலக பிரபலங்கள் தங்களின் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தளபதி விஜய் 

vijay

ப்ரொபைல் பிக்சராக தாங்கள் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் சிலர் வைத்துள்ளனர்.

தல அஜித் 

Ajith

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் குட்டிப் பையனாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பார்க்க வித்தியாசமாக உள்ளார்.

குழந்தைகள் தின வாழ்த்துக்கள். இந்த புகைப்படத்தை கண்டுபிடித்து போஸ்ட் செய்துள்ளேன். உங்களுக்குள் இருக்கும் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று ட்வீட்டியுள்ளார் தமன்னா.

நடிகை வேதிகா தான் சிறுமியாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு யார் என கண்டுபிடிக்குமாறு ரசிகர்களை கேட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகர் சதீஷ் குட்டிப் பையனாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பார்த்தால் அவர் தான் என்றே சொல்ல முடியாதபடி உள்ளார்.

ஹரிஷ் கல்யாண் தனது சிறு வயது புகைப்படங்களை ரசிகை ஒருவர் ட்வீட்டியதை பார்த்து ரீட்வீட் செய்துள்ளார்.

குஷ்பு குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது எடுத்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் போட அதை ரீட்வீட் செய்துள்ளார் குஷ்பு.

ஜெயம் ரவி குழந்தைகள் தினமான இன்று தனது மகன்களின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.