ஹோம் மினிஸ்டர் படத்திற்காக பிரபல ஹீரோ உபேந்திரா இப்படி ஒரு கெட்டப் போட்டுள்ளார்.

மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என்று கூறி அரசியல் கட்சி துவங்கியுள்ளார் கன்னட நடிகர் உபேந்திரா. அவர் தற்போது நடித்து வரும் கன்னட படம் ஹோம் மினிஸ்டர். ஹோம் மினிஸ்டர் என்றதும் அரசியல் படம் என நினைக்க வேண்டாம்.

வீட்டை நிர்வகிப்பவர் என்ற அர்தத்தில் ஹோம் மினிஸ்டர் என படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் ஹீரோயினாக வேதிகா நடிக்கிறார். படத்தில் ஒரு காமெடி காட்சியில் உபேந்திரா பெண் வேடமிட்டு வருகிறாராம்.

தான் பெண் வேடத்தில் இருக்கும் வீடியோவை ஒருவர் ட்விட்டரில் வெளியிட அதை ரீட்வீட் செய்துள்ளார் உபேந்திரா. மேலும் தனது புகைப்படத்தை அவரே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பெண் வேடமிட்டாலும் அழகாகத் தான் இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

vijaysethupathy

இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் அநீதிக் கதைகள் படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் விஜய் சேதுபதி பெண் கெட்டப்பில் இருந்த புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்நிலையில் உபந்திராவின் புகைப்படம் வைரலாகியுள்ளது.

sivakarthikeyan-remo-boxoffice
remo

ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் அம்சமாக வந்து அசத்தினார். அதன் பிறகு ரசிகர்களை பெண் வேடம் போட்டு அசத்தியுள்ளனர் விஜய் சேதுபதியும், உபேந்திராவும்.