சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடித்துவரும் படம் ‘விவேகம்’. விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். ‘வேதாளம்’ படத்தைப் போலவே இந்தப் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைய, கடுமையாக உழைத்து வருகிறார் அனிருத்.

அதிகம் படித்தவை:  மீராமிதுனின் கவர்ச்சி போட்டோக்கள்,அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்தப் படத்தின் தீம் சாங்கை, கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். அஜித் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆனதை முன்னிட்டு, அவர் கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி வந்ததை விவரிக்கும் வகையில் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன், அஜித்தின் பழைய விஷுவல்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து, மாண்டேஜ் சாங்காகத்தான் உருவாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  Vijay and Ajith Social Media Memes

சமீபத்தில் வெளியான ‘விவேகம்’ டீஸரில் இடம்பெற்றிருந்த ‘நெவர் எவர் கிவ் அப்’ என்ற வாசகம், அஜித் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துவிட்டது. எனவே, இந்த வாசகத்தை, தீம் சாங்கில் ஆங்காங்கே பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளது.