இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். விஜய் படங்கள் என்றாலே எப்போதும் ஒருவிதமான பிரச்சனைகளுடன் தான் ரிலிஸாகும்.

அவரின் தலைவா படத்திற்கு நடந்த கொடுமைகள் எல்லாம் அனைவரும் அறிந்ததே, ஆனால், விஜய் தன் திரைப்பயணத்தில் மிகவும் கஷ்டப்பட்ட தருணம் காவலன் படம் வரும் போது தான்.

ஏனெனில் அப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்படி இருந்தது, அந்த படத்தின் மீது விஜய் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

ஆனால், சொன்ன நேரத்தில் அப்படத்தை ஒரு அரசியல் கட்சியினர் ரிலிஸ் செய்யவிடவில்லை, இது விஜய்யை மிகவும் பாதித்தது.

காவலன் படம் மக்களுக்கு பிடித்த படமாக இருந்தாலும், தியேட்டர் கொடுக்காமல், ஒரு சில இடங்களில் ரிலிஸ் கூட செய்யாமல் செய்த சதியால் தோல்வியானது.