Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாகுபலியில் நீருக்கு மேல் தெரியும் பாப்பாவின் ரகசியம் தெரியுமா?
பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீருக்கு மேல் தூக்கிப் பிடித்திருந்த குழந்தை ஒரு பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீருக்கு மேல் குழந்தை மகேந்திர பாகுபலியை தூக்கிப் பிடித்திருக்கும் காட்சி மிக மிக பிரபலமானது. அந்த காட்சியில் பொம்மையை பயன்படுத்தியதாக பலர் கருதினர்.
அது பொம்மை அல்ல நிஜ குழந்தை என்று ரம்யா கிருஷ்ணனே தெரிவித்திருந்தார். படத்தில் நடிக்க வைக்க பிறந்த குழந்தையை தேடிக் கொண்டிருந்தார் ராஜமவுலி.
அப்பொழுது புரொடக்ஷன் எக்சிகியூட்டிவான வல்ஸ்லானின் மனைவிக்கு குழந்தை பிறந்து 18 நாட்கள். இது குறித்து அறிந்த ராஜமவுலி பிறந்து 18 நாளான அக்ஷிதா வல்ஸ்லானை மகேந்திர பாகுபலியாக நடிக்க வைத்தார்.
ஆம், மகேந்திர பாகுபலியாக நடித்த குழந்தை பெண் குழந்தை.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
