Connect with us
Cinemapettai

Cinemapettai

keerthi-suresh11

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷின் பிட்னெஸ் ரகசியம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது பிட்னெஸ் குறித்த ரகசியங்களை வெளியிட்டு இருக்கிறார். கோலிவுட்டில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களின் நாயகிக்கான தேடலில் முதலில் இருப்பவர். தொடரி படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த கீர்த்திக்கு சமூக வலைத்தளத்தில் ட்ரோல்கள் அதிகமாயின. மீம்ஸ்களும் படையெடுத்தது. இருந்தும் அதையெல்லாம் தன்னுள் எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து தன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த செயலால், அவருக்கு பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கீர்த்தி இதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரே என ஒரு கூட்டம் அலைமோத அமைதியாகவே அதை கடந்து சென்றார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அனைத்து எதிர்ப்புகளையும் உடைத்து சாவித்ரியின் உயிரோவியமாக காட்சி அளித்தார். இதை தொடர்ந்து, படத்தின் ட்ரைலர், டீசர் என அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் வெளியாகிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தியின் நடிப்புக்கு பல தரப்பிலும் பாராட்டுகள் கிடைத்தது.

இந்நிலையில், கீர்த்தியின் பிட்னெஸ் குறித்த ரகசியம் வெளியாகி இருக்கிறது. சிறு வயது முதலே தினமும் நீச்சல் அடிப்பதை வழக்கமாக்கி கொண்டு இருக்கிறார். அதற்கு முறையாகவும் பயிற்சி எடுத்து கொண்டவர். தினமும் யோகாவை தவறாமல் செய்து வருபவர். அதுமட்டுமல்லாமல், தனது உணவில் சைவத்தை மட்டுமே எடுத்து கொள்வாராம். அசைவத்தை அறவே தொட மாட்டார். இதுவே தனது தின வழக்கமாக கொண்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top