கத்தி, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கதை, இயக்கத்தில் உருவாகி 2014 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் நாயகராக விஜய்யும் நாயகியாக சமந்தாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு, 2014ம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.

இப்படத்தில் விஜய், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். விஜய் ஏற்கனவே அழகிய தமிழ்மகன் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார்

துப்பாக்கி திரைப்படத்தின் வெற்றிறை தொடர்ந்து இளைய தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் மீண்டும் இணைந்த படம் ‘கத்தி’.

கத்தி திரைப்படத்தில் விஜய் இரு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்தார் சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் வெற்றிக் கூட்டணியில் புதிதாக அனிருத் இணைந்திருப்பதால் படத்தின் இசை மற்றும் பாடல்கள் தொடர்பில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது .

அந்த எதிர்ப்பை அனிருத் பூர்த்தி செய்வாரா என்பதுதான் விஜய் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது ஆனால் அனிருத் அதை பூர்த்தி செய்தார்.

கத்தி படத்தில் மொத்தம் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் ஆகியன இடம்பெற்றன .வழக்கம்போல் இந்த திரைப்படத்திலும் விஜய் பாடும் பாடல் ஒன்றும் இடம்பெற்றது.படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலை அனிருத்தும், ஆதியும் இணைந்து பாடினார்கள்.

விஜய்யின் முக்கிய படங்களில் கத்தியும் ஒன்று. முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் விஜய் காயின் ஃபைட் செய்யும் காட்சி ரசிகப்பட்ட ஒன்றாக இருந்தது.

இது பற்றி இப்படத்தில் பணியாற்றிய DOP செல்வ குமார் விரிவாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இக்காட்சி மிக முக்கியமானது. அதில் நான் போர்டில் இருந்தேன்.லைட் கட், ஆன், ஆஃப் என சரியாக இன்ஸ்ட்ரக்சன் கொடுக்க வேண்டும். மிஸ் ஆகிவிடக்கூடாது. ஏனெனில் ஸ்டண்ட் நடிகர்கள் மேலிருந்து குதிப்பார்கள். ரிஸ்கான சீன்கள் இருந்தது. அதுவும் இதுவும் ஒன்றாக அமைய வேண்டும்.

படத்தில் நடிகர் சதீஷ் மெயின் ஆஃப் செய்வார். ஆனால் உண்மையில் அதை செய்ததது நான் தான். வெளியிலிருந்து வாக்கி டாக்கி மூலம் பேசிக்கொள்வோம். இந்த பிராஸஸ் சரியாக அமைந்ததால் யூனிட்டில் அனைவரும் என்னை பாராட்டினார்கள் என கூறியுள்ளார்.

விஜய் தற்பொழுது மெர்சல் நடித்து முடித்துள்ளார் இந்தப்படம் வரும் தீபாவளிக்கு வருகிறது விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’.

இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது வருகிறது.