சரவணா ஸ்டோர் அண்ணாச்சி முன்னணி ஹீரோயின்களுடன் விளம்பரத்தில் நடித்தாலும் நடித்தார், அவருக்கு ஏகப்பட்ட மீம்ஸ்களை வாரி வழங்கினார்கள் நமது நெட்டிசன்கள்.

ஆனால், அதற்கெல்லாம் அவர் கவலை படாமல், அடுத்தடுத்த விளம்பரங்களில் எப்படி எல்லாம் புதுமையாக தோன்றலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், அவர் கதாநாயகனாக சினிமாவில் நடிக்கப் போவதாகவும், நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.

அதிகம் படித்தவை:  ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக பிரபல நடிகை ஒப்பந்தம்...!!!

பின்னர் அந்த தகவல் தவறானது என்று சரவணா ஸ்டோர் நிர்வாகம் அதை மறுத்து விட்டது. ஆனாலும், தமன்னாவுக்குதான் அதில் ரொம்ப வருத்தமாம்.

படம் நடிப்பதாக தகவல் வந்தால், இமேஜ் பார்க்காமல், அவரோடு விளம்பரத்தில் நடிக்கும் தம்முடைய பெயர்தானே வந்திருக்க வேண்டும். நயன்தாராவின் பெயர் எப்படி வந்தது? என்று அவர் வருத்தப்பட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவிற்கு டப்பிங் பேசிய பிரபல நடிகை.

 

இந்நிலையில், தம்மை கேலி செய்தவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லும் வகையில் புது விளம்பர படம் ஒன்றில் அண்ணாச்சி நடித்துள்ளாராம்.

சரவணா அண்ணாச்சியை பார்த்து “வாங்க ஹீரோ” என்று தமன்னாவே அழைப்பது போல், அந்த விளம்பர படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.

அண்ணாச்சியின் அடி மனதில் இப்படி ஒரு ஆசை இருந்தது இவ்வளவு நாள் யாருக்கும் தெரியாமல் பொய் விட்டது போல.