இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது மனைவி நீதாவின் மீது கொண்ட தீராக்காதலால், அவரின் விருப்பத்தின் பேரில் மும்பையில் ஆன்டிலியா என்ற மாடமாளிகையை கட்டியுள்ளார்.

கண்ணாடி மாளிகையான ஆன்டிலியாவின் கோபுரங்கள், மேகத்தைக் கிழித்து செல்லும் கோபுரத்தை போல் தொடுவானத்தில் காணப்படும்.

 

50 மாடி கோபுரம்

27 மாடி கோபுரம் 570 அடி இந்த ஆன்டிலியா 50 மாடி கோபுரத்தை விட உயரமானது,இதில் 27 மாடிகள் உள்ளது.570 அடி உயரத்தைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் சில தளங்கள் சராசரி உயரத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு உயரமாக இருக்கும்.

 

 

 

600 பணியாளர்கள்

4,532 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டது ஆன்டிலியா.இது தோராயமாக 49,000 சதுரடியாகும்.இந்த வீட்டில் அம்பாணி குடும்பத்தார் 5 பேர் வசிக்கிறார்கள்.600 பணியாளர்கள் அம்பானி குடும்பத்தாருடன் சேர்ந்து இந்தச் சொகுசு மாளிகையைத் தினசரி அடிப்படையில் பராமரிக்க 600 பணியாளர்கள் வசிக்கிறார்கள்.

 

 

 

 

 

தனித்துவம் வாய்ந்தது

தனித்துவம் வாய்ந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்திலும் பொதுவான அமைப்பைக் கொண்டுள்ள ஹொட்டல் அல்லது அபார்ட்மெண்ட்டை போல் அல்லாமல்,ஆன்டிலியாவில் எந்தத் தளமும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டதில்லை, பொருட்களைப் பயன்படுத்தியதில்லை.ஒன்பதாவது தளத்தில் உலோகம் ஒன்பதாவது தளத்தில் உலோகம் பயன்படுத்தப்பட்டிருந்தால் பன்னிரண்டாவது தளத்தில் அதனை பயன்படுத்தக்கூடாது.செய்ததையே செய்யாமல், நிலைத்தன்மையுடனான பல்வேறு பாணிகள் மற்றும் வடிவங்களைக் கொண்ட கட்டிடக்கலையின் உருவகமாக இந்தக் கட்டுமானம் இருக்க வேண்டும் என்பதையே இதன் பின்னணி.

 

அள்ளித்தெளிக்கும் ஆடம்பரம்

 

பல்வேறு தளங்களுக்கு சேவையளிக்க ஒன்பது லிஃப்ட்கள் உள்ளது.குடும்பத்தார், விருந்தாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு தனித்தனி லிஃப்ட்கள் உள்ளது.உடற்பயிற்சியுடன் கலந்துள்ள சொகுசு அம்பானி வீட்டில் ஸ்பாவுடன் கூடிய கிரிஸ்டல் சரவிளக்குகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய பாரூம் உள்ளது. இந்த அறையில் உட்புற/வெளிப்புற மதுபானம் அருந்தகம், ஓய்விடங்கள், கழிப்பறைகள் மற்றும் ஒப்பனை அறைகள் போன்றவை உள்ளது.