நடிகை அனுஷ்காவை இளமையாக காண்பிக்க, 2 கோடி ரூபாயை பாகுபலி 2 படக்குழு, செலவிட்டுள்ள தகவல் இப்போது தெரியவந்துள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ள படம், பாகுபலி 2.

இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கும் இந்தப் படத்தில் அனுஷ்கா தேவசேனாவாக நடித்திருந்தார். அவரை இளமையாக காண்பிக்க, படக்குழு 2 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா - டீசர்

அதாவது சமீபத்தில் ஷாரூக் கான் இரட்டை வேடத்தில் நடித்து இந்தியில் வெளியான படம், ஃபேன்.

இந்தப் படத்தில் ஒரு ஷாரூக் கான் மிகவும் இளமையாகக் காணப்பட்டார். அவரை இளமையாக காண்பிக்க, ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் சிறப்பு கிராபிக்ஸ் வேலையை செய்தது.

அதிகம் படித்தவை:  தாய் பாசத்தை திரையில் உண்மையாக காண்பித்த ரீல் அம்மாக்கள்!

ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோவில் செய்யப்பட்ட இந்த கிராபிக்ஸ் செயல் முறையில் அனுஷ்காவையும் இளமையாகக் காண்பிக்க படக்குழு முடிவு செய்தது.

இதற்காக செய்யப்பட்ட செலவு மட்டும் ரூ.2 கோடியாம்.