fbpx
Connect with us

Cinemapettai

அஜித் எத்தனை கோடியை வரி செலுத்துகிறார் தெரியுமா? பிரபல நடிகர்

News | செய்திகள்

அஜித் எத்தனை கோடியை வரி செலுத்துகிறார் தெரியுமா? பிரபல நடிகர்

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி,அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள்.

தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார்.

மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.

“எனக்கு கட் அவுட், பாலாபிஷேகம் வேண்டாம். அவரவர் அம்மா, அப்பாவைக் கவனியுங்கள்” என்பது தன் ரசிகர்களுக்கு அஜித்தின் கண்டிப்பான அறிவுரை. ஒரு கட்டத்தில் தனது ரசிகர் மன்றங்களை முற்றாகக் கலைத்த துணிச்சல் மிக்க இந்திய நடிகர் இவர் மட்டுமே.

இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடிகர் அஜித் முன்றாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் விவேகம் படம் ஏற்கனவே முன்பதிவில் பாகுபலி சாதனையை முறியடித்திருந்தது. இண்டர்நேஷனல் ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதனையடுத்து விவேகம் திரைப்படம் ரஜினியின் கபாலி சாதனையை முறியடித்தது அனைவரும் அறிந்ததே.

அஜித் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. தன்னுடன் இருப்பவர்களுக்கும், தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கும்
தன்னால் முடிந்த வரை உதவக்கூடியவர்.

சமீபத்தில் நடந்த ஒரு விவாதத்தில் நடிகர் மன்சூல் அலிகான் கலந்துக்கொண்டார், அதில் கலந்துக்கொண்டு அவர் பேசுகையில் ’சினிமா
தற்போது மிக மோசமான நிலையை சந்தித்து வருகின்றது.

அரசியல்வாதிகள் தான் வரி செலுத்தாமல் ஏமாற்றுகின்றார்கள், அஜித் தான் வாங்கும் சம்பளத்தில் ரூ 10 கோடி வரை வரியாக செலுத்துகின்றார்’ என்று மன்சூல் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top