அஜித்தின் முதல் வெற்றிப் படம் ‘ஆசை’. அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்து, அவரைக் காவிய நாயகன் ஆக்கியது ‘காதல் கோட்டை’.

மூன்று தேசிய விருதுகளுடன் 365 நாட்கள் ஓடிய ‘காதல் கோட்டை’யின் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்களின் மனதில் கோட்டை கட்டினார் அஜித். காதல் கதைகளில் மட்டும்தான் அஜித் நடிப்பார் என்பதை, ‘வாலி’யும் ‘அமர்க்கள’மும் மாற்றின.

‘அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது ஷாலினியுடன் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ முறைகளில் ஷாலினியை மணந்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு காதல் கிசுகிசுக்களில் சிக்காத நடிகராகவும், பேட்மிண்டன் விளையாட்டில் மனைவியை ஊக்குவிக்கும் அன்பான கணவராக இருக்கிறார்.

‘அமர்க்களம்’ படத்துக்குப் பின் அடுத்தடுத்துப் பல வெற்றிகள் அமைந்தாலும் ‘ரெட்’ படத்துக்குப் பிறகு ‘தல’ என்று அவருடைய ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர்.

பாக்ஸ் ஆபீஸிலோ ‘ஓபனிங் ஸ்டார்’ என்று பாராட்டத் தொடங்கினார்கள். ‘வரலாறு’ படத்தில் பெண் தன்மை இழையோடிய நடனக் கலைஞர் கதாபாத்திரத்திலும், ‘வில்லன்’ படத்தில் சில நொடிகளில் முகபாவங்களை மாற்றும் எதிர்மறைக் கதாபாத்திரத்திலும் நடித்தது, அஜித்துக்கான வெகுஜன ரசிகர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தியது.

தற்பொழுது தல அஜித் வீடு சென்னையின் திருவான்மியூரில் இருப்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் அவர் இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா? அதே வீட்டில் தான் என நினைத்தால் அது தவறு. அவர் தற்போது ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஆனால் இந்த வாடகை வீடு என நம் அனைவருக்கும் கேள்வி எழும்? எதற்க்காக என்றால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அஜித்-சாலினி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ‘குட்டி தலை’க்காகத் தான் இந்த வாடகை வீடு ஏற்ப்பாடு. அவருக்காக திருவான்மியூர் வீட்டை மீண்டும் ரீமாடல் செய்து வந்தார்.

தற்போது அந்த வீட்டின் ரீமாடல் வேலையும் முடிந்து விட்டது. அந்த வீட்டின் கதவு முதல் கிட்சன் வரை அனைத்துமே ரிமோட் மூலம் இயங்கக் கூடியதாக ஏற்ப்பாடு செய்திருக்கிறார் தல அஜித்.

இந்த வீட்டில் தற்போது ஷாலின் அவர்கள் பேட்மின்டன் விளையாட தனி கோர்ட் வசதியும், தன் மகளுக்காக பரதம் பயில தனி இடமும் அமைத்திருக்கிறார் தல.