அஜித், விஜய் இருவருமே ரசிகர்கள் பலம் அதிகம் கொண்டவர்கள். இவர்களின் திரைப்படங்கள் வரும் போதெல்லாம் ரசிகர்களின் கொண்டாட்டமே அதை சொல்லும்.ajith vivegam

படங்களில் நடிகனாக இருந்தாலும் நிஜ வாழ்வில் நல்ல மனிதர்கள் என உடன் பணியாற்றியவர்கள் பேட்டிகளில், பத்திரிக்கைகளில் பகிர்ந்ததுண்டு. இதில் அனைவரும் ஒருமித்த அனுபவமாக சொல்வது ஷூட்டிங் டைமில் இருவருமே உடன் இருப்பவர்களுக்கு அஜித், விஜய் இருவருமே Tea தேநீர் ஊற்றி பரிமாறுவார்கள் என்பது தான்.vijay record

இது நல்ல பண்பு என்பது படத்தில் உடன் பணியாற்றிவர்ளுக்கு மட்டுமல்ல, சீனா பாரம்பரியத்திலும் தான். சீன வரலாற்றில் தேநீர் என்பது தேசிய பானமாக கருதப்படுகிறது.

மேலும் உடன் இருப்பவர்களுக்கு டீ பரிமாறுவதை அவர்களது வரலாற்றில் மரியாதையின் குறியீடு ( As a Sign Of Repect ) என்பார்கள். அதாவது தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் கீழிருப்பவர்களை மரியாதையுடன் உபசரிப்பதே இதன் பொருள்.

தமிழர்களின் பழக்கத்தில் இருந்தாலும் தேநீரின் ஆரம்பம் சீனாவில் தான். இப்போது சொல்லுங்கள் நல்ல பண்புகளை யாரிடமும் கற்றுக்கொள்ளலாம் தானே.