அஜித் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. அதிக அளவு ரசிகர்கள் பலம் கொண்டவர் என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.அஜித் எந்த சினிமா விழாக்களிலும், பாராட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும். அது அவரது பாலிசி என்பார்கள்.

அவர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியாக ஒரு முறை தமிழ் சினிமாவில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதில் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அப்போது வெங்கட் பிரபு பற்றி பேசும் போது எனக்கு இவரின் தம்பியாக பிறக்கவில்லையே என வருத்தம் இருக்கிறது.

இவர் கதையில்லாமல் கூட படம் எடுக்கலாம். ஆனால் தம்பியில்லாமல் படம் எடுக்கமாட்டார் என கூறினார். இதை கேட்ட அஜித் சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தார்.அருகில் இருந்தவர்களும் இதை பார்த்து ஆச்சர்யப்பட்டனர். இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். அவரும் சிரித்தார்.