Cinema-Backgroung-Song-Dancers

தமிழ்சினிமா இன்று உலகம் முழுக்க நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. பிரபல நடிகர்,நடிகைகள் நடித்த படம் என்றால் இன்னும் மவுசு அதிகம்.

100 கோடி என்ற இழக்கை முன்னணி ஹீரோக்களின் படங்கள் எளிதாக எட்டிப்பிடித்து விடுகின்றன. தமிழ் திரைப்படம் என்றாலே பாடல்களுக்கு முக்கிய இடம் உண்டு. படத்தின் 15 முதல் 20 நிமிடத்திற்கு ஒரு முறை பாடல் காட்சி இடம்பெறவேண்டும் என்பது எழுதபடாத விதி. அவ்வப்போது, ஒன்றிரண்டு படங்கள் கதையின் தன்மையை பொருத்து பாடல்கள் இல்லாமல் வெளிவருவது உண்டு. ஆனால், 95% படங்களில் பாடல்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.

பாடல் என்றால் நடனம், ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் என்று பாடலே உள்ளது. அந்த வகையில், படத்தின் ஹீரோ, ஹீரோயின் பாடலில் முக்கிய இடம் பெறுவார்கள். திடீரென பல பின்னணி நடிகர், நடிகைகள் தோன்றுவார்கள். இவர்களுக்கும் படத்தின் கதைக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. ஆனால், பாடல் காட்சிகளில் மட்டும் ஹீரோ ஹீரோயின் உடன் சேர்ந்து ஆடி விட்டு மறைந்து விடுவார்கள்.

சொல்ல போனால் அந்த பாடல் காட்சிகளுக்கு உயிர் ஊட்டுவதே இவர்கள் தான். ஹீரோ ஹீரோயின் மட்டும் நடனம் ஆடும் பாடல்கள் எப்போதாவது வெளிவரும். ஆனால், 99% பாடல்கள் பல நடன கலைஞர்களை சேர்த்தே உருவாக்கபடுகின்றன.

சரி, இப்படி நடனம் ஆடும் இவர்களுக்கு சம்பளம் எவ்வளவு வழங்கப்படுகின்றது தெரியுமா? தெரியாது என்றால் தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் மாதம் 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

ஒரு மாதத்தில் எத்தனை படம், எத்தனை பாடல்கள், எந்த மாதிரியான பாடல் என்பதை பொருத்து இவர்களின் சம்பளம் வேறுபடும். ஆனால், இவர்களுக்கு நிலையான வருமானம் கிடையாது. ஆடினால் பணம், இல்லையென்றால் ஒன்றுமில்லை. இது தவிர, மேடை நிகழ்சிகள் மாற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஆடியும் இவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர்.