condom

ஆணுறைக்கு நம்ம சன்னி லியோன், பிபாஷா பாசு போன்ற நடிகைகள் விளம்பரங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது அதன் பிராண்டு அம்பாசிடராகவும் இருந்து வருகின்றனர். மேலும் இந்த விளம்பரங்கள் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறது விளம்பர நிறுவனங்கள்.

condom

இந்நிலையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் காண்டம் விளம்பரத்திற்கு மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் திடீர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் வருமானம் பெருமளவு பாதிப்பு ஏற்படும் என தொலைக்காட்சி சேனல்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகைகளுக்கு காசு கொட்டும் விளம்பரங்கள்:

AFP மேன்ஃபோர்ஸ் ஆணுறை நிறுவனத்தின் விளம்பர தூதராக உள்ளார் சன்னி லியோன், முன்பே ஒரு ஹிந்து படிகைக்கு இவரது காண்டம் பேனரில் வெளியிடப்பட்ட வாசகங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

condom

Play Gard காண்டமின் விளம்பரத்தூதுவராக உள்ளார் பிபாஷா பாசு. சமீபத்தில் வெளியான இவரது ஆபாச காண்டம் விளம்பரம் சமூக தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எது எப்படியோ இந்த விளம்பரங்கள் இவர்களுக்கு பல கோடிகளை அள்ளி அள்ளி தருவதென்னவோ மறுக்க முடியாத உண்மை.

கட்டுப்பாடு:

காண்டம் விளம்பரங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக வந்த புகார்கள் மற்றும் நேரடி வழக்குகளால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முக்கிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன்படி தொலைக்காட்சி சேனல்கள் காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை காண்டம் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.ஸ்மிரிதி இரானி தலைமையிலான மத்திய தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சகம் இதனை வேண்டுகோளாக விளம்பர நிறுவனங்களிடம் முன்வைத்துள்ளது. குழந்தைகள் பார்க்க தகுதியற்றவை என்பதால், இரவு நேரத்தில் ஒளிரபரப்புவதுதான் சரியானதாக இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகளில் இது போன்றுள்ள கட்டுப்பாடுகள் என்னவென்று பார்ப்போம் வாங்க.

அமெரிக்கா

அமெரிக்காவின் மத்திய தகவல் தொடர்பு ஆணையம் (ஃஎப்சிசி) தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான தரக் கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளது. அருவருப்பான உள்ளடக்கங்கள் எதுவும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிப்பரப்பக்கூடாது என்று ஃஎப்சிசி விதிமுறைகள் குறிப்பிடுகின்றன. இந்த நேரம் “பாதுகாப்பான புகலிட நேரங்கள்” என்று குறிப்பிடப்படுகின்றன.

condom

பிரிட்டன் வாட்டர்ஷெட்:

பிரிட்டனில் தொலைக்காட்சிகளில் வயதுவந்தோருக்கான உள்ளடக்கங்களை எந்த நேரத்துக்குப் பிறகு ஒளிபரப்பவேண்டுமோ அந்த நேரம், “வாட்டர்ஷெட்” என்று அழைக்கப்படுகிறது.

இலவச அலைவரிசைகள் குழந்தைகளுக்கு முற்றிலும் பொருத்தமற்ற உள்ளடக்கங்களை இரவு 9 மணியில் இருந்து அடுத்த நாள் அதிகாலை 5.30 மணிவரை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்.

சீனா

அருவருப்பு, மூடநம்பிக்கை அல்லது வன்முறையை வளர்க்கின்ற, நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிலையங்கள் தயாரிப்பதற்கும் ஒளிபரப்புவதற்கும் சீன சட்டம் தடை விதிக்கிறது.

ஆணுறைகள் மற்றும் பாலியல் தொடர்பான பண்டங்களின் விளம்பரம் தொடர்பாக குறிப்பான சட்டம் ஏதுமில்லை. ஆனால், அந்த விளம்பரங்கள் அருவருப்பு தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கவேண்டும்.

ஆஸ்திரேலியா

குழந்தைகளை பாதிக்கின்ற நிகழ்ச்சிகளை இரவு 8.30 முதல் அடுத்தநாள் அதிகாலை 5 மணிவரை மட்டும் ஒளிபரப்பும் விதமாக ஆஸ்திரேலியா கட்டுப்படுத்தியுள்ளது.

இத்தகைய உள்ளடக்கங்கள் பள்ளி நாள்களில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையும் ஒளிபரப்பலாம். இந்த மணிநேரங்களில் பொதுவாக குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்போராக இல்லாமல் இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  சரத்குமார் இவளவு விவரமா??? இத படிங்க முதலே!!!