இனி ஒருமுறையா… வேண்டவே வேண்டாம்… தலைத்தெறிக்க ஓடும் கஞ்சா கருப்பு அது வேற ஏரியா… சூதானமாகத்தான் இருக்கணும்… என்னை ஆள விடுங்க சாமி என்று எஸ்கேப் ஆகிறார் கஞ்சா கருப்பு.

சொந்த படம் எடுத்து நொடித்து போய் இருந்த கஞ்சா கருப்பு மீண்டும் தன் டிராக் காமெடி தான் என்று உணர்ந்து அந்த பக்கம் திரும்பிட்டார். இதனால் செம பிஸியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று வந்துவிட்டார்.பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜூலி என ஒவ்வொருவராக சிலர் மீண்டும் உள்ளே போகிறார்களே.. கஞ்சா கருப்புவும் அப்படி மீண்டும் செல்வாரா என்று விசாரித்தால் “ஆளைவிடுங்கப்பா சாமி.. அது வேற ஏரியா.. கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும்.. நமக்குலாம் அது செட்டாகாதுப்பா” என்று எஸ்கேப்..

இப்போது சந்தன தேவன், அருவா சண்ட, கிடா விருந்து, ‘குரங்கு பொம்மை, ‘பள்ளிப் பருவத்திலே’ என படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கிறாராம்.