தீபாவளிக்கு ரிலீஸ் ஆகத் திட்டமிட்டிருக்கும் அந்த பெரிய படம் வெளியாவதில் சில பல சிக்கல்கள் நீடித்ததால் அந்த படத்தின் ஹீரோவுக்கு இப்படி ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறார் தயாரிப்பாளர்.

இந்த படம் திபாவளிக்கு வரும் என அனைத்து ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கிறார்கள் ஆனால் படமோ பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறது இந்த பிரச்சனைகளை கண்டு படக்குழு பல திட்டங்கள் போட்டது பின்பு சில பிரச்சனைகளில் இருந்து வெளிவந்தது.

actors

85 கோடி என்று ஆரம்பித்த படத்தின் பட்ஜெட் ஏகத்துக்கும் எகிறி இறுதியாக 135 கோடியாகி நிற்கிறது. ‘இது உங்கள் சக்திக்கும் எங்கள் சக்திக்கும் ரொம்ப அதிகம்.

தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகலைன்னா நான் தற்கொலை தான் பண்ணிக்கணும். எப்படியாவது தயாரிப்பாளர் சங்கத்து தலைவர்கிட்ட பேசி ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வாங்க… அரசாங்கத்துக்கிட்டயும் பேசி விலங்கு சம்பந்தப்பட்ட பிரச்னையை முடிச்சு வைங்க…’ என்று புலம்பியிருக்கிறார்.

actor

முதல் வேண்டுகோளை ஏற்று தலைவருக்கு பிரஷர் போட்டாராம் ஹீரோ. வேறு வழியில்லாமல், பெயருக்கு ஏதோ வரி குறைப்பு செய்ததை ஏற்று ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்றுள்ளார் தலைவர்.