fbpx
Connect with us

Cinemapettai

யாரையும் முந்தி செல்ல வேண்டாம்! யாரை சொல்கிறார் கமல்?

Kamal-64thNational-Award

News | செய்திகள்

யாரையும் முந்தி செல்ல வேண்டாம்! யாரை சொல்கிறார் கமல்?

முந்திச்சொல்வதை விட, முன்னேற்றத்தின்பின் செல்வதே பெருமை. பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள்,குடியரசு புரிந்ததா? முன்னேற்றத்துக்கு பின் செல்வதே பெருமை என நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.kamal

கடந்த சில நாட்களாக நடிகர் கமல் அரசியல் தொடர்பாக பல டுவிட்டர் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். தமிழக அரசு அமைச்சர்களை கூட தில்லாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கியதை தடுத்த தனது நற்பணி இயக்கத்தினருக்கு நடிகர் கமல் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்து இருந்தார்.

இயக்கத்தின் வக்கீல் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என தெரிவித்திருந்த கமல், சட்ட மீறல் கூடாது என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இரவு மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில்,’ முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை ’என குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top