மே 21, The Complete Actor என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மலையாள நடிகர் மோகன்லாலில் பிறந்தநாள்.

இவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பிரேமம் புகழ் இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரனிடம் ஒரு ரசிகர் மோகன்லாலை வைத்து மங்காத்தா போல் ஒரு படம் இயக்குங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு ஆல்போன்ஸ், என்னை பொறுத்தவரை Clint Eastwood, Toshiro Mifune, Marlon Brando, Al Pacino Robert De Niro போன்ற நடிகர்களை விட சிறந்தவர் மோகன்லால். அவரை வைத்து மங்காத்தா போல் ஒரு படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் இயக்கவா என்று கேட்டுள்ளார்.