fbpx
Connect with us

என் வாழ்க்கையையும் நாசம் செய்ய பாக்குறியா.! ஜூலியை திட்டிய பிரபலம்.!

News / செய்திகள்

என் வாழ்க்கையையும் நாசம் செய்ய பாக்குறியா.! ஜூலியை திட்டிய பிரபலம்.!

பிக்பாஸ் நிகழச்சியில் பங்கேற்று துவக்கத்தில் அனுதாபத்தை பெற்று வந்த ஜூலி பின்னர் பலரின் சர்ச்சைகளுக்கு உள்ளானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு தற்போது அதிகளவில் சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளது.

சொல்லப் போனால் ஓவியாவுக்குப் பின்னர் ஜூலிக்குத்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது, விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தலை காட்டி வந்த ஜூலி திடீரென கலைஞர் டிவிக்கு தாவினார்.

julie

இதில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் கோகுல் உள்ளனர்.

கலைஞர் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஜூலிக்கு ரூ. 30 லட்சம் என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. இந்த செய்தி அடங்குவதற்குள் ஜூலி பற்றி மேலும் ஒரு செய்தி வந்துள்ளது.

இப்போதைய ஹாட் டாபிக் என்னவென்றால் ஜூலி மற்றும் ரக்சன் காதல் கதைதான். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

julie biggboss

juli

பிக் பாஸ் என்கின்ற நிகழ்ச்சியில் மூலம் பலரது வெறுப்பை மட்டுமே சம்பாதித்துக்கொண்டு வெளியே வந்த ஜூலிக்கு தற்போது சினிமாவில் நடிப்பதற்கு கூட வாய்ப்புகள் பல குவிந்து வருகிறதாம்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர் ரக்ஷனை ஜூலி காதலித்து வருவதாகவும் இவர்கள் இருவரும், சென்னையில் உள்ள மால்களில் சுற்றி வருவதாகவும் கூறப்பட்டது.

juliana

மேலும் ரக்ஷன் ஜூலிக்கு மோதிரம் ஒன்றை பரிசளித்துள்ளதாகவும், அந்தத் தகவலை ஜூலி நண்பர்களிடம் கூறியதால்… இந்தத் தகவல் நண்பர்கள் மூலமாக வெளியே வர தொடங்கியது.

இதனைக் கேள்விப் பட்ட ரக்ஷன், ஜூலிக்கு போன் செய்து ‘ நீ உன் வாயலதான் கெடப் போற… ஏன் என்னோட வாழ்க்கையையும் சேர்த்து சீரழிக்குற’ உன் நண்பர்கள் மூலமாகத்தான் நீயும் நானும் பழகி வருவது மற்றும் உனக்கு நான் மோதிரம் பரிசளித்த விஷயம் வரை வெளியே போய் உள்ளது எனக் கூறி. இனி என் மூஞ்சிலேயே முழிக்காதே எனக் கூறிவிட்டாராம்.

juli

இதனை கேட்ட ஜூலியும் தனது பங்குக்கு தன் பாணியில் வசை பாட ஆரம்பித்து விட்டாராம்.

பின்னர் அடுத்த நாள் காலை ஜூலி ரக்சன் வீட்டிற்கே சென்று அவர் கொடுத்த மோதிரத்தை கொடுத்து விட்டாராம்.இந்த விஷயங்களை இணைய தளத்தில் கசிய விடுவது ஜூலியின் நண்பர் ஒருவதானாம்.

அவரை ஜூலி கண்டித்து வைத்தால் நல்லது. இல்லை என்றால் அவரது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும் நிலை உருவாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top