விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இது விக்ரமின் 53-வது படமாகும். இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் படத்துக்கு இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

தமிழ்த் திரை உலகில் தன்னுடைய இயல்பான நடிப்பாலும், வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் உச்சத்தை அடைந்தவர் விக்ரம். அவர் கடைசியாக நடித்து வெளிவந்த ‘இருமுகன்’ படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. பொதுவாக ஒருபடத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை செலவிடும் விக்ரம், இந்த முறை ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் வெளியானது.

இது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விக்ரமின் 53-வது படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகியது. ‘ஸ்கெட்ச்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். விக்ரம் புதுசா ஒரு ஸ்கெட்ச் போடுறாரு தெரியுமா.

தன் வாரிசை களமிறக்க நினைக்கும் பெரும்பாலான ஹீரோக்களும், இயக்குனர்களும் சொந்தக் காசை இறைப்பதுதான் வழக்கம். விஜய், சிம்பு, தனுஷ், விஷால், உதயநிதி என்று நீளும் இப்பட்டியலில் ஜீவா, சிபிராஜ் போன்ற ஆவரேஜ் ஹீரோக்களும் இருக்கிறார்கள்.

ஆனால் விக்ரம் கெட்டியாச்சே? தன் மகனை யார் தலையிலாவது கட்டுவதற்கு நாள் நட்சத்திரம் பார்த்து காத்திருந்தார். ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்களிடம் “என் பையனை வச்சு படம் எடுங்க” என்று கேட்டுப் பார்த்தும் நோ ரெஸ்பான்ஸ்.

விக்ரமின் வலைக்குள் இருந்த ஏ.ஆர்.முருகதாசும் நழுவினார். எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். “பையனை ஃபிரியா தர்றேன். படத்தை நீங்களே தயாரிச்சு எடுங்க” என்ற விக்ரமின் தாராள(?) கண்டிஷன்தான்!

பேக்கரிய நான் வச்சுக்குறேன். அக்காள நீ வச்சுக்க என்கிற வியத்தகு வியாபாரத்திற்கு உருப்படியாக ஒருவரும் சிக்கவில்லை.Vikram-Thanks2Fans

இந்தநிலையில்தான் தெலுங்கில் ஏராளமான படங்களை தயாரித்த வெயிட்டான நிறுவனம் ஒன்று சிக்கியது விக்ரம் பார்வையில். அவர்களும் விக்ரமின் மகன் துருவ்வை வைத்து படம் எடுக்க தயாராக இருக்க…. கொத்துடா கோவாலு என்று ஒரே கொத்தாக கொத்திவிட்டார். முதலில் அட்வான்ஸ் பெற்று மகனை கமிட் ஆக்கிக் கொண்ட விக்ரம், இனிமேல்தான் டைரக்டரையே முடிவு பண்ணப் போகிறாராம்.

முதல்ல ரயில்ல உட்கார இடம் வேணும். அதை கெட்டியா பிடிச்சுகிட்டா ஜன்னலுக்கு வெளியே கைய விட்டுக் கூட தண்ணீர் பாட்டில் வாங்கிக்கலாம். எப்படி நம்ம சீயானின் ஐடியா?