விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியானது மெர்சல். மருத்துவத் துறையை விமர்சித்த இந்தப் படத்தில், மத்திய அரசின் திட்டங்களான GST மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்றவற்றை விமர்சிக்கும் வசனங்களும் இடம்பெற்றன.

இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், நீக்காவிட்டால் வழக்குத் தொடரப்படும் எனவும் எச்சரித்தார் தமிழக பா.ஜ.க-வின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

mersal-box

அவரைத் தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் மெர்சல் படத்துக்கான தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார். அவருக்கு ஆதரவாக மற்ற பா.ஜ.க-வினரும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் உட்பட பலர் அவ்விதமான காட்சிகளை நீக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்துவருகின்றனர். பல்வேறு ஊடகங்களில் இதுகுறித்து விவாதங்கள் நடைபெற, ட்விட்டரில் #MersalVsModi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

mersal vijay
mersal vijay

தமிழ் சினிமா ஆர்வலர்கள் உட்பட, பல்வேறு மீம் கிரியேட்டர்களும் களத்தில் இறங்கி படத்துக்கு ஆதரவு தரும் வண்ணம் பதிவுகள் இட்டு வருகின்றனர். கமல்ஹாசன், திருமாவளவன், இயக்குநர் பா.ரஞ்சித், வைகோ உட்பட பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

படத்தில் ஜி.எஸ்.டி தொடர்பாக இடம்பெற்ற வசனங்களில் தவறு ஏதும் இல்லை, கருத்துரிமை அடிப்படையிலேயே அந்த வசனங்கள் உள்ளன என தணிக்கைக்குழு மண்டல அதிகாரியும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

mersal movie review
mersal vijay

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தின் சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பினர் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சென்சார் அனுமதி பெற்று வரும் திங்கள் முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘மெர்சல்’ படம் வெளியான மாலையே முழுப்படத்தையும் ஆன்லைனில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ் தனது டுவிட்டர் தளத்தில் ‘சர்ச்சைக்குரிய காட்சிகளை திரையரங்குகளில் நீக்கினாலும் நாங்கள் நீக்கமாட்டோம்.

முழு படத்தையும் காண எங்களிடம் வாருங்கள்’, மக்களால் நாங்கள், மக்களுக்காக நாங்கள்’ என்று பதிவு செய்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் இந்த பதிவு ஒருபக்கம் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இது ஓப்பன் சவாலாக இருப்பதாக வருத்தத்தையும் அளித்துள்ளது.