Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விவேகம் போல் இதில் இருக்க கூடாது… சிவாவிற்கு தல போட்ட கண்டிஷன்

vivegam-cinemapettai

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் அஜித் ஒரு கண்டிஷன் போட்டு இருப்பதால் படக்குழு பரபரப்பாகி இருக்கிறது.

விவேகம் படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவு இருந்தது. வாரா வாரம் வியாழக்கிழமை அஜித்தின் புகைப்படங்கள் என வெளியிடப்பட்டது. இதனால் படம், மாஸ் ஹிட் அடிக்கும் என தல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், படத்தின் வெளியீடு தல படைக்கே அவ்வளவு திருப்தி தரவில்லை. படத்தில் அஜித்திற்கு ஓவராக சில வசனங்கள் வைத்தது வேறு விமர்சனத்துக்கு ஆளானது. பல நாட்கள் கழித்து, வெளியான அஜித் படம் என்பதால் வசூல் நல்லதாக அமைந்ததாலும் படம் சூப்பர் ஹிட் என சொல்ல முடியவில்லை.

இதை தொடர்ந்து, அஜித் தனது அடுத்த பட வாய்ப்பையும் இயக்குனர் சிவாவிற்கே கொடுத்தார். இதற்கு சிவாவால், தனக்கு ஒரு நல்ல படத்தை கொடுக்க முடியும் என அவர் நம்பியதே காரணம் என கூறப்பட்டது. எப்போதும் இல்லாமல், இக்கூட்டணியில் உருவாகும் நான்காவது படத்தின் டைட்டில் விஸ்வாசம் என முதல் நாளே அறிவிக்கப்பட்டது. படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அஜித்திற்கு முதல்முறையாக டி.இமான் இசையமைக்கிறார். நாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா நடிக்கிறார். இருவருக்கும் ரசிகர்களிடம் ஒரு மாஸ் இமேஜ் இருப்பதால், இது படத்திற்கு உதவும் என இயக்குனர் சிவா திட்டமிட்டார். இதே வேளையில், படத்தில் அஜித் அப்பா, மகன் என இரு வேடத்தில் நடிக்க இருக்கிறார். இளம் அஜித்தின் ஜோடியாக சாக்‌ஷி அகர்வால் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் பரவி இருக்கிறது.

பிப்ரவரி மாதமே தொடங்க இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு, பல கட்டமாக தள்ளிப் போனது. சில வருடமாக தீபாவளியை வெறுமையாக கொண்டாடி வரும் ரசிகர்கள், இந்த வருடம் தல படத்துடன் கொண்டாட எண்ணி இருந்ததால், தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்பதே படக்குழுவின் திட்டமாக இருந்தது. அப்படி? இப்படி? என பலகட்ட எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்து இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை ஆரம்பிக்கும் போதே இயக்குனர் சிவாவை அழைத்த அஜித், விவேகத்தில் நடந்த தவறுகள் விஸ்வாசத்தில் நடக்க கூடாது என கண்டிஷன் போட்டு இருக்கிறார். இதனால், அஜித்துக்காக தயாரிக்கப்படும் பன்ச் டைலாக்குகளில் இயக்குனர் சிவா கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top