Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் அனுஷ்காவை காதலிக்கிறேனா? என்ன சொன்னார் தெரியுமா பிரபாஸ்

அனுஷ்காவை காதலிப்பதாக தொடர்ந்து பரவி வரும் வதந்திக்கு நடிகர் பிரபாஸ் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
படத்தில் ஜோடி போட்ட நடிகரும், நடிகையும் கச்சிதமாக பாத்திரத்தில் பொருந்தி விட்டால் அவர்கள் ரியல் ஜோடிகளாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்குவர். சில நட்சத்திரங்கள் மக்கள் பார்த்த கெமிஸ்ட்ரியை தங்களுக்குள்ளும் உணர்ந்து திருமண பந்தத்தில் இணைந்து விடுவர். ஆனால், சிலருக்கோ இதெல்லாம் நடிப்பு தானே என இருக்கும். அவர்களை தான் ரசிகர்கள் ரவுண்ட்டு கட்டுவர். அப்படி ஒரு ஜோடி தான் பிரபாஸ் அனுஷ்கா. 6 அடியில் இருக்கும் இருவரையும் பார்க்க இரண்டு கண்கள் போதாது. தெலுங்கு திரை உலகின் பிரம்மாண்ட படைப்பான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ஜோடி போட்டனர். அவ்வளவு தான் ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என கிள்ளி போட்டனர்.
தீ பற்றிக்கொண்டது. சமூக வலைத்தளங்களில் இதே பேச்சுகள் தொடங்க, இரு தரப்பும் அதெல்லாம் இல்லை என மறுப்பு வெளியிட்டது. பிரபாஸுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அதுவும் அவரின் உறவினர் பெண்ணாக இருக்கும் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் அறிவித்தன. அதே வேளையில் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த அனுஷ்கா, தன் பெற்றோர்களிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால், பாகுமதி படத்தை முடித்த கையோடு தனக்கு வந்த வாய்ப்புகளை மறுத்தார். இந்த நிலையில், அனுஷ்காவும், பிரபாஸும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் மீண்டும் பரவ தொடங்கி இருக்கின்றன.
இதற்கு நடிகர் பிரபாஸ் முதல்முறையாக தனது தரப்பு விளக்கத்தை வெளியிட்டு இருக்கிறார். நானும் அனுஷ்காவும் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்குள் காதல் என்று எதுவுமே இல்லை. நானும், அவரும் திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுவது முற்றிலும் வதந்தி. என் சொந்த வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பேச விரும்பவில்லை. எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டால், கண்டிப்பாக எல்லாருக்கும் முறையாக அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
