Tamil Nadu | தமிழ் நாடு
தமிழகமெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் அதிர்ந்து போன திமுக.. ஆப்பு புதுசா இருக்கே!
தமிழகத்தில் தற்போது முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவியின் வழிவந்த எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் அமைந்த அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.
மேலும் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை நியமிக்கலாம் என்ற வாக்குவாதம் பல நாட்களாக அதிமுகவில் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், மு க ஸ்டாலினுக்கும் தான் கடுமையான போட்டி நடைபெற உள்ளது.
இவ்வாறு இருக்க தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

edappadi-stalin-3-cinemapettai
மேலும் எடப்பாடி பழனிசாமி அவர்களை பாராட்டியும், மு க ஸ்டாலினின் நடவடிக்கைகளையும், பேச்சையும் கிண்டலடித்தும் வாசகங்கள் எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

edappadi-stalin-2-cinemapettai
அதாவது இந்தப் போஸ்டர்களில், எடப்பாடி அவர்களை ‘மண்ணின் மைந்தன், செயல் நாயகன்’ என்று பெருமைப்படுத்தி கூறிவிட்டு, மு க ஸ்டாலின்- ஐ ‘அறிக்கை நாயகன்’ என்று விமர்சித்துள்ளனர்.

edappadi-stalin-1-cinemapettai
இந்த போஸ்டர்களை பார்த்த திமுக கட்சியினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
