Connect with us
Cinemapettai

Cinemapettai

விக்கிரவாண்டி – நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு..

stalin-edappadi

Politics | அரசியல்

விக்கிரவாண்டி – நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு..

சென்னை: விக்கிரவாண்டி – நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த ராதாமணி காலமானதை  தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியாக உள்ளது.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ  பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி தொகுதி கடந்த சில மாதங்களாக காலியாக உள்ளது.

இனி டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என கூறினார். மேலும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top