திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

TVK தொண்டர்களை மிரட்டும் திமுக? வாக்காளர் முகாம்களில் நடந்த மோதல்.. அரசியலில் அடுத்த பரபரப்பு

அரசியலில் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தால்தான் பெற்றி பெறமுடியும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் எனும் வள்ளுவர் கூற்றுப்படி உலகத்தைப் புரிந்து கொண்டாலே போது. அந்த அனுபவத்தை எப்படி நேர்த்தியாய்ப் பெருவது என்பது கைக்கூடிவிடும்.

அப்படித்தான், தமிழகத்தில் அரசியல் கட்சி தேவை, புதிய தலைவர் தேவை என்பதை உணர்ந்து, தன் ரசிகர்களின் வேண்டுகோளையும் ஏற்று, மற்ற நடிகர்களைப் போல் காலம் தாழ்த்திவிடாமல், சூதனமாக தன் கேரியரின் உச்ச பட்சத்தில் இருந்து 50 வயதில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

அக்டோபர் 27 ஆம் தேதி வெற்றிக் கொள்கைத் திருவிழா எனும் பெயரில் பிரமாண்ட மாநாட்டை நடத்திக் காட்டிய அவர் திராவிட அரசியல் கட்சிகளுக்கு இணையாக தன்னால் கூட்டமும் மாநாட்டையும் நடத்திக் காட்ட முடியும் என்பதை நிரூபித்தார்.

தவெக தலைவர் விஜயின் பக்கா பிளானும் திமுகவின் மிரட்டலும்?

இந்த நிலையில் வரும் 2026 தேர்தலுக்குள் 1 கோடி வாக்காளர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து, தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் நிர்வாகிகள் 28 மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சியைப் பலப்படுத்தி வரும் அக்கட்சித் தலைவர் விஜய், அனைத்து மாவட்டங்களிலும் தம் கட்சி வாக்காளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் அதில் உள்ளதா? என்று சரியாக டிவிகே வாக்காளர் முகாம்கள் நடத்த உத்தரவிட்டுருக்கிறார்.

அதன்படி, பல தொகுதிகளில் இவ்வாக்காளர் முகாம்கள் சிறப்பாக நடந்து வரும் நிலையில் ஆளுங்கட்சி இதைகண்டு திகைப்படைந்துள்ளதாகவும், பல இடங்களில் இம்முகாம்களை நிறுத்தச் சொல்லி மிரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதியில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, டிவிகே வாக்காளர் முகாம்களை தடை செய்வதாகவும், அதேபோல் சென்னை அயோத்தி குப்பத்தில், திமுகவினர் தவெகவினர் இடையே வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News