Tamil Nadu | தமிழ் நாடு
தமிழக அரசின் உத்தரவை மீறியதால் ஸ்டாலின் உட்பட 150 திமுக உறுப்பினர்கள் மீது வழக்கு.. திக்குமுக்காடும் திமுக
சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி போன்ற நான்கு நாட்களில் தமிழகத்தில் கிராம சபை கூடுவது வழக்கம்.
தற்போது கொரோனா பாதிப்பினால், ஏற்கனவே ஆகஸ்ட் 15ம் தேதியான குடியரசு தினம் அன்றும், மே 1 தேதியான தொழிலாளர் தினத்தன்றும் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக அரசு கொரோனா பரவலை மனதில் வைத்து அன்றும் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்தது.
தமிழக அரசின் தடையை மீறி திமுக உறுப்பினர்கள் தலைவராக இருக்கும் பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடத்தியதால், ஸ்டாலின் உட்பட 150 திமுக கட்சி உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “அதிமுக திமுகவை பார்த்து அஞ்சுகிறது? கிராமசபை கூட்டம் நடைபெற்றால் கொரானா பரவுமா?” போன்ற முட்டாள்தனமான கேள்வியை எழுப்பி சமூகவலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகி உள்ளார்.
எனவே திமுக தலைவர் ஸ்டாலினின் வேடிக்கையான பேச்சால் ஊரே கைகொட்டி சிரிக்கிற நிலைக்கு தள்ளப்பட்ட திமுகவை பார்த்து அதிமுக அஞ்சுகிறதா? என்றும் சமூகவலைதளங்களில் நக்கலடிக்கின்றனர்.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டதை கூட புரிந்து கொள்ள முடியாத திமுக, இதில் கூட மக்களின் நலனை கருதாமல் தமிழக அரசின் உத்தரவை மீறியதால் பொது மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது.

mk-stalin-dmk
எனவே, இதன்மூலம் வரும் தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
