Connect with us

Cinemapettai

asuran-dhanush

Cinema News | சினிமா செய்திகள்

அசுரனை பாராட்டிய அரசியல் பிரபலம்.. வைரலாகும் தனுஷின் ட்விட்டர் பதில்

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் அக்டோபர் 4-ஆம் தேதி வெளிவந்த அசுரன் திரைப்படம் வசூலில் அசுர வேட்டையாடி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய வசூல் நிலவரப்படி சுமார் 100 கோடியை தாண்டியுள்ளது என்று தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மக்கள் முதல் நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பாராட்டு மழையில் நனைந்த அசுரன் படம், தற்போது எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் அந்தப்படத்துக்கு என நேரம் ஒதுக்கி, படத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது : அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறன்க்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்க்கும் பாராட்டுகள் எனக் கூறியுள்ளார்.

தனுஷ் கூறிய நன்றி : காலம் கடந்து அசுரனை பார்த்ததற்கும் பாராட்டியதற்கு மிக்க நன்றி என ரிப்ளை செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top